தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
 
மேலும், 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது முடிவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்ய அக்டோபர் மாதம் இறுதி வரை (2 மாதங்கள்) வாய்ப்பு அளிக்கப்பட்டது.
 
இதனால் மொத்தம் 13,96,326 பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன.
 
அதில் 2,19,392 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
 
விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று களஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்றது.
 
புதிய வாக்காளர்களாக 4.50 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்; இறப்பு, இடமாற்றம் என 5,62,937 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
 

மேலும் : பட்டியலை வாக்காளர்கள் சரிபார்த்து உறுதி செய்யவும் : தேர்தல் ஆனையம்

தற்போது இந்த பணிகள் முடிந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். இது பாலின முறையில் 
 
ஆண் வாக்காளர்கள் – 2,92,56,960 பேர்,
 பெண் வாக்காளர்கள் – 2,98,60,765 பேர், 
மூன்றாம் பாலினத்தவர்கள் – 5,472 பேர் உள்ளனர்
 
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர். சென்னையில், மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
 
சென்னை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார் .
 
சென்னையில் ஆண் வாக்காளர்கள் : 18,83,989 பேர்,
பெண் வாக்காளர்கள் : 19,34,078 பேர்,
மூன்றாம் பாலினத்தவர்கள் : 932 பேர் உள்ளனர்
 
சென்னையில் அதிகம் வாக்காளர்கள் உள்ள தொகுதி வேளச்சேரி. குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி துறைமுகம்.
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பொன்னையா வெளியிட்டார்.
 
ஆண் வாக்காளர்கள் – 18 லட்சத்து 26 ஆயிரத்து 614 பேர்
பெண் வாக்காளர்கள் – 18 லட்சத்து 64 ஆயிரத்து 23 பேர்
மூன்றாம் பாலினத்தவர்கள் 360 பேர்.
மொத்தம 36,90,997 வாக்காளர்கள் .
 
தமிழ்நாட்டிலேயே சோழிங்கநல்லூர் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர்
ஆண்கள் – 311,102
பெண்கள் – 307,518
மூன்றாம் பாலினத்தவர்கள் – 75
 
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்களர் பட்டியலை வெளியிட்டார்.
 
அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 71ஆண் வாக்காளர்களும் 9 லட்சத்து ஆயிரத்து 984 பெண் வாக்காளர்களும் 154 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 17 லட்சத்து 68 ஆயிரத்து 853 வாக்காளர்கள் உள்ளனர்.
 
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இன்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 719 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 40 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 66 ஆயிரத்து 482 வாக்காளர்கள் உள்ளனர்.
 
நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 485 ஆண் வாக்காளர்கள், 12 லட்சத்து 89 ஆயிரத்து 108 பெண் வாக்காளர்கள், 90 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 25,37,683 வாக்காளர்கள் உள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே இன்று வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 7,45,626 ஆண் வாக்காளர்கள், 7,31,387 பெண் வாக்காளர்கள், 148 மூன்றாம் பாலினத்தவர்கள் என 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 உள்ளனர்.
 
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ரோகிணி வெளியிட்டார்.
14 லட்சத்து 31 ஆயிரத்து 687 ஆண் வாக்காளர்கள்,
14 லட்சத்து 30 ஆயிரத்து 76 பெண் வாக்காளர்கள்
118 மூன்றாம் பாலினத்தவர்கள்
மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 881 வாக்காளர்கள்
 
புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளுக்கான இறுதி வாக்களர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு இன்று வெளியிட்டார்.
மொத்த வாக்காளர்கள் 9,59,566
ஆண் வாக்காளர்கள் -4,53,153
பெண் வாக்காளர்கள் – 5.06,330
மூன்றாம் பாலினத்தவர் – 99