தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக ஹெச்.வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் காங்கிரஸ் செயல் தலைவர்களாக கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்ததற்கு இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
 
பின்னர் பேட்டியளித்த அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்வேன் என தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கட்சியினுடைய மத சார்பற்ற கொள்கை, காங்கிரஸ் கட்சியினுடைய மதத்திற்கு எதிரான கொள்கை, விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களை மேம்படுத்த வேண்டும் என்ற கொள்கை கல்வித்துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கொள்கை, விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற கொள்கை, இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கொள்கை, மேலும் தமிழகத்தை உலகின் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கை, போன்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் அமைப்பை பலப்படுத்துவதற்கு மூத்த தலைவர்களின் துணையோடு பெரும் பங்காற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, தமிழகம், வளர்ச்சியை மோடி, அரசாங்கம் வளர்ச்சி சக்கரத்தை பின்நோக்கி தள்ளி கொண்டிருக்கிறார்கள். சரியான பொருளாதார புரிதல் அவர்களுக்கு இல்லை. இதனால் பல்வேறு துறைகளில் பின்னடைவு சந்தித்து வருகிறோம்.
 
விவசாய வளர்ச்சி குறைந்துள்ளது, பண ,மதிப்பிழப்பு நீக்கத்தினால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜிஎஸ்டி ஆல் நடத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது, இவைகளுக்கு பிரிதல் இன்மை தான் காரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.