முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத் பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸ், நேற்று (09.12.2021) ஐபிசி Section 153(A), 504, 505(2), 505(1B) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டநிலையில், அவரை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதால் . அவரின் பதிவுகள் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன.

மாரிதாஸ் கடந்தாண்டு பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீதும், பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளார்களை அவதூறாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றமும் மாரிதாஸ் வெளியிடும் அவதூறு வீடியோக்களை நீக்கவும், பொய் தகவலோடு வீடியோ வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனாலும் மாரிதாஸ் தனது போக்கை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி மீது அவதூறு பரப்பி வரும் மாரிதாஸ், அரசின் பல்வேறு நல்லத்திட்டங்கள் பற்றி பொய் பிரச்சாரம் செய்து வந்தார். அதன்தொடர்ச்சியாக சமீபத்தில் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

முதலில் அவரது மரணத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த காவலர்களே காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு காவல்துறையினர் காரணம் இல்லை என தெரித்விதனர்

இந்த சம்பவம் குறித்து மாரிதாஸ் டிசம்பர் 7 ஆம் தேதி தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், “முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் இறந்த தகவல் அதிர்ச்சியாக உள்ளது. அதை விட அதிர்ச்சி மீடியா எந்த விவாதமும் இல்லாமல் கடந்து செல்வது. திமுகவிற்கு உற்ற துணையாக மீடியாக்கள் உள்ளன. எனவே எந்த குற்றமும் மறைக்கலாம் திமுக? முதல்வர் துறை ஆகப் பதிலளிப்பது அவர் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட அவரோடு பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர். இந்திய விமானப் படை இதை விபத்து கூறிய நிலையில் .. .

ஆனால், யூட்யூபர் மாரிதாஸ் இதை பற்றி வேறு விதமான கருத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னுமொரு காஷ்மீராக மாறுகிறதா? தேசத்துக்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கும் என்றால், அங்கே எந்த பெரிய சதிவேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டார். ஆனால், இதனால் எழுந்து எதிர்ப்பு காரணமாக அவரின் பதிவை அவரே நீக்கிவிட்டார்.

எனினும் மாரிதாஸ் பதிவிட்ட இந்த கருத்து, சமூக வலைதளங்களில் தீயாக பரவி, சட்டம் ஒழுங்கி பிரச்சனையாக உருவெடுத்த இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ், அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக புகார்கள் குவிந்ததால் மதுரையில் உள்ள அவருடைய இல்லத்தில் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாரிதாஸை விசாரிக்க மதுரை புதூரில் உள்ள வீட்டுக்கு காவல்துறையினர் சென்றபோது, பாஜக ஆதரவாளர்கள் பலரும் திரண்டனர். பாஜக நிர்வாகிகள் மாரிதாஸை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் காவல்துறையினர் அவரைக் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதனையடுத்து, பாஜக ஆதரவாளரான மாரிதாஸை தேசிய இறையாண்மையை குலைக்க முயற்சி, பொது அமைதியை சீர்குலைத்தல், அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட ஐபிசி Section 153(A), 504, 505(2), 505(1B) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மாரிதாஸ் மீது போட்ட நாலு பிரிவுகளில் இரண்டில் தேசத்துக்கு எதிராக கலகம் விளைவிக்கும் வவையில் ராணுவத்தை, நாட்டை மட்டம் தட்டி பேசியதால் போடப்பட்ட 2 சட்டபிரிவுகள் படி 3 முதல் 5 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (10.12.2021) மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை வரும் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி உத்தரவைத் தொடர்ந்து, மாரிதாஸ் உத்தம‌பாளையம் கிளை சிறையில் அடைக்கபட்டார் …

https://www.facebook.com/savenra/posts/7505919766100548