லண்டனில் அரசியல் உத்திகள் சார்ந்த படிப்புகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது:

“டோக்கலாம் விவகாரம் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. பல்வேறு பிரச்னைகளின் தொடர்ச்சியாக ஏற்பட்ட சச்சரவுதான் டோக்கா லாம் விவகாரம்.

பூடான், சீனா, இந்தியா எல்லையில் உள்ள டோக்கா லாம் சச்சரவை பிரதமர் மோடி தொடர்ந்து கவனித்து வந்திருந்தால் சச்சரவை நிறுத்தியிருக்கலாம். டோக்கா லாம் பகுதியில், இன்றளவிலும் சீன ராணுவத்தினர் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்., என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி சிறப்பான உத்தியைக் கொண்டிருக்கவில்லை. அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் சிரமம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்த 1947-இல் இருந்து தற்போது வரை கணக்கில் எடுத்துக் கொண்டால் பெரும்பாலான ஆண்டுகள் ராணுவ ஆட்சியே நடைபெற்று வந்திருக்கிறது.

இறையாண்மையுடன் கூடிய ஒரு அமைப்பு கூட அந்நாட்டில் கிடையாது. பாகிஸ்தான் ஒரு நிலையான கட்டமைப்பை ஏற்படுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா காத்திருக்க வேண்டும்” என்றார்.

வெளிநாட்டுக்கு செல்லும் போது பிரதமர் மோடியை பற்றி பேசும் ராகுல்காந்தி நம் நாட்டின் கலாச்சரத்தை கொடுத்து விட்டார் என பாஜகவினர் குற்றம் சாட்டுகிறனர்.