சத்துணவு முட்டை டெண்டருக்கான தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
 
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கி வருகிறது இந்த முட்டைகள் வழங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் இருந்து டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு அவர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
 
கடந்த 2016-17ம் ஆண்டிற்கான முட்டை கொள்முதல் அரசாணையை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது. நாளொன்றுக்கு 48 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரி கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி சுமார் 220 கோடி ரூபாய் மதிப்பில் அரசாணை 57 அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த அரசாணையில் வெளி மாநிலத்தில் உள்ள முட்டை நிறுவனங்கள் பங்கேற்க முடியாது, தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து, தமிழக நிறுவனங்கள் அந்த 6 மண்டலங்களுக்கும் தனித்தனியாக டெண்டர் அறிவிப்புகளை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
 
இதனை எதிர்த்து முட்டை நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
 
தமிழக அரசின் சத்துணவு முட்டை டெண்டர் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
மேலும் சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைத்து தான் இந்த நிபந்தனைகளுடன் டெண்டர் அரசாணை வெளியிட்டோம் என பதில் மனுவில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் அரசாணை முறையாக இல்லை, நிறைய பாகுபாடு இருப்பதாக கூறி சத்துணவு முட்டை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டது.
 
புதிய டெண்டர் அரசாணையை தமிழக அரசு வெளியிடலாம், அதுவரை தற்போது ஏற்கனவே உள்ள ஒப்பந்ததாரர்கள் முட்டைகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் அனைவரும் பங்குபெறும் வகையில் டெண்டர் அரசாணை இல்லை என்று கருத்து கூறிய நீதிபதி, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான டெண்டர் அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இதம் முலம் இனி பெருவாரியாக ஊழல் செய்வது தடுக்கபட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன