ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அனுமதி வியப்பை தந்தாலும், இந்த முடிவிற்கு பலர் வரவேற்பை அளித்து வருகின்றனர்.