ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அப்பலோ தரப்பு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அப்பலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு , ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மருத்துவர்கள் அடங்கிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்ற அப்பலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதிமுக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரனைக்கு வரமால் அதிமுக துனை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் டிமிக்கி கொடுத்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது அவருடைய தரப்பைக்கு மகிழச்சியை கொடுத்துள்ளதாக அவர் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்,