தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் 5ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வா் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்று, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலிலதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த பிரியதர்ஷினி இயக்கவுள்ளார். “தி ஐயன் லேடி” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தொடக்க விழா ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மறைந்த தினமான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெற்றிருப்பது ஜெயலலிதாவா இல்லை நித்யா மேனனா என்று கேட்கும் அளவிற்கு போஸ்டர் அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது. இதற்கு முன்னதாக, இயக்குனர்கள், பாரதிராஜா, விஜய், லிங்குசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.