சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் (சிஐஎஸ்எப்) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த யஸ்பால் (வயது 26) என்பவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரராக கடந்த 2017 ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்துள்ளார். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை யஸ்பால் சென்னை சா்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் பணியில் இருந்தாா். அப்போது விமான நிலைய கழிப்பறைக்குள் சென்றவா், திடீரென தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாா்.

துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, விமானநிலைய தூய்மை பணியாளா் ஒருவா் ஓடிச்சென்று பாா்த்தபோது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழந்து கிடந்தாா்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விமானநிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், விமானநிலைய காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினா்.

பின்னர் யஸ்பால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.