சென்னையில் கடந்த 19 நாட்களில் காணாமல் போன 277 கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரத்தை மண்டலவாரியாக ஒவ்வொரு நாளும் அறிவித்து வருகிறது c. பொதுவாக தமிழகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் பரிசோதனை மையங்கள் மூலம் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை, கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 277 பேர் மாயமாகிவிட்டதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனா பிடியில் தள்ளாடும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை..?
சம்பந்தப்பட்ட நபர்கள், தவறான முகவரி மற்றும் செல்போன் எண்களை கொடுத்துவிட்டு தப்பிவிட்டதாகவும், அந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சென்னை மாநகராட்சி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு காரணம் சில தனியார் பரிசோதனை மையங்களில் விவரங்கள் முறையாக சேகரிக்கப்படவில்லை, அதனால் இவர்கள் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தப்பிய 277 கொரோனா நோயாளிகளை தீவிரமாக தேடும் பணியில் காகவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்