மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ், விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திருவெம்பாலபுரம் கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற விவி மினரல்ஸ் எனப்படும் தாதுமணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குனர் நீரஜ் கட்ரிக்கு ரூ.4 லட்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான புகாரில், லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநராகப் பதவி வகித்தவர், நீரஜ் கட்ரி. பல்வேறு ஆலைகளுக்கு விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழல் அனுமதியைக் கொடுத்ததாக அவர்மீது ஊழல் புகார்கள் எழுந்தன.
அதனால், சிபிஐ அதிகாரிகள், நீரஜ் குமாரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ஒரு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அத்துடன், வருமானத்துக்கு அதிகமாக பல்வேறு இடங்களில் அபார்ட்மென்ட் வாங்கியிருப்பதற்கான பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
[su_image_carousel source=”media: 22469,22470″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது பல்வேறு சாட்சியங்களை சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
நீரஜ் குமாருக்கு லஞ்சமாகக் கொடுத்த பணம் தொடர்பாக, ‘கொடுத்துவிட்டு டொனேஷன் கணக்கில் எழுதவும்’ என வைகுண்டராஜன், தன் கைப்பட எழுதிய ஆவணத்தையும் சிபிஐ தாக்கல் செய்தது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிர்ஜா பாட்டியா தலைமையில் நடந்த வழக்கில், பிப்ரவரி 1 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அதன்படி தண்டனை விவரங்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகின. அதில் முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும்,மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வி.வி.மினரல் நிறுவனத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.
லஞ்சம் கொடுக்க உதவியதாக வைகுண்டராஜனின் அலுவலக ஊழியர் சுப்புலட்சுமி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டணையும், 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை எப்படி.. உயர்நீதிமன்றம்