தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: உதவி காவல் ஆய்வாளர் (கைரேகை பிரிவு) – 202 இடங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.500 மற்றும் காவல்துறை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் காவல்துறையினருக்கான இட ஒதுக்கிடு மற்றும் பொது பிரிவினருக்கான இட ஒதுக்கிடு இரண்டிலும் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 30 வயது, ஆதிதிராவிடர், அதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப்படையினர்(பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது, 20 சதவீதம் காவல் துறையினருக்கான ஒதுக்கீடு விண்ணப்பதாரர் (29.8.2018 அன்று 5வருடங்கள் காவல் துறையில் பணிபுரிந்திருக்க வேண்டம்) 45 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து 10+2+3 என்ற முறையில் அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தேர்வுமைய விவரங்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: எழுத்து தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய..