நேரு ஆட்சி காலத்தில் 1947- 1963 களில் இந்தியா
கிழக்கு திபெத் ஒன்றில் சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த தொந்துபிப் லாமோ (லாமோ தொந்துப்) ஜுலை 6-1935 ல் பதினான்காம் தலாய் லாமாவாக டென்சின் கியாட்சோ என்ற பெயரில் சமயப் பெரியோர்களால் நியமிக்கபட்டார்.
 
தனது நான்காம் வயதில் பிரமாண்டமான பொட்லா அரண்மனையில் தலாய் லாமாவாக நியமிக்க பட்ட இவர், தனது பதினான்காம் வயதிலேயே அனைத்துத் துறைகளிலிலும் சிறந்து விளங்கும் திபெத்தின் தலைசிறந்த தலாய் லாமாவாக உயர்ந்தார்.
 
இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.
 
இந்நிலையில் சீன கம்யூனிச தலைவர் மா சே துங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சங் கை செக் தோல்வியுற்று தனது படைகளுடன் பார்மோசா தீவில் தனது ஆட்சியைத் தொடர்ந்து வந்தார். 1950களில் சீன அரசு தலாய் லாமாவை சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது.
 
தலாய் லாமாவை திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் தர்மசாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்ந்து வருகிறார்.
 
புதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியபோது திபெத்திற்கு பேரிடி காத்திருந்தது. சீனா கண்காணிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் பொறுப்பு ஒப்படைத்திருந்த பகுதிகளை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என சீனா பகிரங்கமாக அறிவித்தது. 1950 அக்டோபர் மாதம் சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன.
 
திபெத்தின் தலைநகர் லாஸாவிற்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் சீனா தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிரம்பிய தலாய் லாமா சீனப்படையை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட, திபெத்தியர்களும் ஆவேசத்துடன் போரிட்டனர்.
 
ஆனால் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட சீனப் படையுடன் 10,000திற்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் திபெத்தியர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
 
இதன் காரணமாக திபெத் அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. எனவே சீன அரசின் மேலாதிக்கம் திபேத்தின் மீது இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையொப்பமானது. அந்த சரத்தின் படி, சீனா திபெத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது.
 
ஆனால் திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் முழுமையான குறுக்கீடுகளுடனும் சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக இறங்கியது. இதை அடுத்து திபெத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீனத் துருப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
 
கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு சீனா தலாய் லாமாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் தலாய் லாமா ‘இது சுதந்திர போராட்டம்’ என கூறி சீனா “திபெத்தை விட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால் வெளியேற்றப் படுவீர்கள்” என அறகூவல் விடுத்தார். இதனால் சீனாவின் அடக்கு முறைக்கெதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
 
திபெத்தில் ஆங்காங்கே சீன துருப்புகளுக்கெதிரான கொரில்லா தாக்குதல் கடுமையாக்கபட்டது. இந்நிலையில் சீன அரசு தலாய் லாமாவை விருந்திற்கு அழைத்து அவரைச் சிறைபிடிக்க முடிவெடுத்தது. தலைநகர் லாஸாவில் முகாமிட்டிருந்த சீன இராணுவம் அரண்மனையைக் கைபற்றி லாமாவை பிடிக்கும் யோசனையுடன் 1959 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் அரண்மனைமீது கடுமையான பீரங்கி தாக்குதல் நடத்தியது.
 
திபெத்திய உயரதிகாரிகள் அறிவுரையின்படி தலாய் லாமாவும் அன்று இரவு சாதாரண அரண்மனை சிப்பாய் போல் வேடமிட்டு அரண்மனையில் இரகசிய வழியாக வெளியேறி இரவோடு இரவாக திபெத்தின் கிரிசு ஆற்றைக் கடந்தார்.
 
ஆற்றின் மறுகரையில் அவருக்காக காத்திருந்த சிறு படையின் உதவியோடு பல நூறு கி.மீ. நடந்து 31 நாட்கள் பயணம் செய்து 1959 ஆம் நாள் ஏப்ரல் 18 ஆம் நாள் இந்தியா வந்து சேர்ந்தார்.
 
இதனிடையில் லாமா கிளம்பிய மறுதினம் அதிகாலையிலேயே படைகள் அரண்மனையைச் சுற்றி வளைத்தன. ஆனால் லாமா தப்பிவிட்டார் என்ற செய்தி கிடைத்தது.
[su_spacer size=”30″]

மலை வழி பாதையாக எருது மேல செல்லும் அன்றைய இந்திய பிரதமர் நேரு

[su_spacer size=”30″]
திபெத் எங்கும் அவரை தேடும் பணி தீவிரமானது. எல்லைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமையான செய்கையால் சுமார் 87000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர்.
 
மேலும் 27000 பேர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டனர். இவ்வளவு நடந்தும் லாமாவைப் பற்றி எந்த ஒரு திபெத்தியரும் வாய் திறவாமல் மௌனம் காத்தனர்.
 
“தலாய் லாமாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்தியாவிடம் சீனா கோரியது. ஆனால் அதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறுத்துவிட்டார். 
தலாய் லாமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த பின்னர் அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் பெரும் அலை எழுந்தது.
 
தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சாமானிய மக்கள் என்று அவரது தரிசனத்துக்காக கியூ கட்டி நின்றனர்.
 
இந்த உணர்வு அவருடன் இருந்த இதர திபெத்தியர்களை தட்டி எழுப்பியது. தில்லி, பாம்பே போன்ற நகரங்களில் மாசேதுங் மற்றும் சீனாவுக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள் நடந்தன.
 
சில ஊர்வலங்களில் மாசேதுங் கொடும்பாவி எரிப்பு, போஸ்டர் மீது சாணி அடிப்பது போன்றவையும் நடந்தன. இது சீனாவை மேலும் கோவப்படுத்தியது.
 
அதற்குப் பின் இந்தியா பயணித்த சூ என் லாய் நேருவிடம் இது குறித்து புகார் அளித்தார். தலாய் லாமாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு கேட்டார்.
 
அதற்கு நேரு பின்வரும் பதிலைத் தந்தார்: ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே அமைதி வழிப் போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் எந்தத் தடையும் இல்லை. வன்முறையைத் தூண்டாத வரை யாரையும் இங்கே எங்களால் தடுக்க முடியாது,’ என்றார்.
 
[su_quote]அதோடு நிற்கவில்லை: ‘இந்த ஊரில் எனக்கே கூட கருப்புக் கொடி காட்டுவார்கள். என் வீட்டு வாசலிலேயே நடக்கும். நீங்கள் இருக்கும் போது அப்படி நடந்தால் கூட்டிப் போய் காட்டுகிறேன்,’ என்றார்  [/su_quote]
[su_spacer size=”30″]
இந்த பதில் சூ-என்-னுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர் அடுத்து சந்தித்த நேருவின் சகா மொரார்ஜி தேசாயிடம் இது குறித்து கோபத்துடன் விவாத்திதார் . ஆனால் மொரார்ஜியின் பதில் அதை விட நேர்த்தியாக  வந்தது 
 
[su_quote]’கார்ல் மார்க்ஸ்சுக்கு ஜெர்மனியில் பிரச்சினை வந்த போது அவருக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்ததே! அங்கிருந்து அவர் சுதந்திரமாக இயங்கி கம்யூனிஸ்ட் புரட்சிக் கருத்துகளை பரப்பிக் கொண்டுதானே இருந்தார்? அப்படி இங்கிலாந்து அனுமதித்ததில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்ததா?’ என்று தேசாய் கேட்டிருக்கிறார்.[/su_quote]
 
இதை கேட்ட சூ-என்-லாய் வாயடைத்துப் போயிருக்கிறார். இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்த தலாய் லாமா, சுமார் பத்தாயிரம் திபெத்தியர்களோடு 60 ஆண்டுகளாக தர்மசாலாவில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார்.
[su_spacer size=”30″]

பிரதமர் மோடி 18 முறை சீனா அதிபரை சந்தித்தும் இந்தியா 120 நாட்களில் ச 5000 சதுர கி.மீ இழக்க நேர்ந்தது மட்டுமல்ல , இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் இறந்தது மட்டுமல்ல , அண்டை தேசம் நேபாள் உள்ளிட்டவை இந்தியாவுடன் பகைமை வளர்த்து சீனாவுடன் நட்புறவு பாராட்டுவது இந்தியாவின் ராஜங்க தோல்வியாக பார்க்கப்படுகிறது ..

[su_spacer size=”30″]
பாஜக ஆட்சியில்  2014~2020 களில் இந்தியா
2018ல் நடந்த விஷயம் இது ..  தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்து 60 ஆண்டுகள் ஆன நிகழ்வை பெரிய அளவில் கொண்டாட இந்திய திபெத்திய சமூகம் முடிவெடுத்தது. Thank You India என்று அதற்கு பெயர் வைத்து விமரிசையாக தில்லியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
 
ஆனால் மேலிடத்தில் இருந்து என்ன உத்தரவு வந்தது என்று தெரியவில்லை. அதில் பங்கெடுக்க இருந்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் விலகிக் கொண்டனர்.
 
கூடவே அந்த நிகழ்ச்சியை தில்லியில் நடத்த வேண்டாம் என்றும் வேண்டுகோள் வந்தது. மத்திய அரசுக்கு சங்கடம் தர வேண்டாம் என்று திபெத்தியர்கள் முடிவெடுத்துக் கொண்டு தலாய் லாமாவின் வசிப்பிடமான தர்ம சாலையிலேயே சிறிய அளவில் நடத்தி முடித்துக் கொண்டனர்.
 
1960களில் அனுப்ப மட்டேன் ., தலாய் லாமாவை ஓப்படைக்க மட்டோம் என்று மட்டும் இந்தியா கூறவில்லை மேலும் தலாய் லாமாவை ஆதரவாக எழும் உணர்வினை எங்களால் தடுக்க முடியாது என சொன்ன  தலைமை எங்கே  ..  
[su_spacer size=”30″]
ஆனால் இந்தியாவுக்குள்   இந்தியாவில்  2018ல் தனது சொந்த நாட்டின் தலைநகரில் தலாய் லாமா ஒரு நிகழ்ச்சி நடத்துவதே சீனாவை வருத்தப்பட வைக்கும் என்று பயந்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்த தலைமை  எங்கே..   என படிப்பவர்கள் முடிவு செய்வது  தானே சரியாக அமையும் ..
[su_spacer size=”30″]
 
Reference – நன்றி
1) Patriots and Partisans – by Ramachandra Guha
2) Farrer-Halls, Gill. World of the Dalai Lama. Quest Books: 1998
3) Thubten Samphel and Tendar (2004)
4) Wikipedia