ரஷ்யாவின் கிரம்ளின் தகவல்படி சிரியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்தை அமெரிக்காவின் 13 ஆள் இல்லா விமானங்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ரஷிய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் கூறிய விவரம் “ஒரு குழுவினரால் பொதுவான போருக்கு பயன்படுத்தப்படும் பதின்மூன்று ஆளில்லா விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. அந்த நேரத்தில் அமெரிக்க போசிடன்-8 உளவு விமானம் எட்டு மணிநேரத்திற்கு மத்தியதரைக் கடல் பகுதியை ரோந்து சுற்றி வந்தது என கூறினார்”
கிரம்ளினுக்கு செய்தித் தொடர்பாளர் இன்று காலை டிரோன் தாக்குதல் அமெரிக்க இராணுவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது என எச்சரிக்கை செய்ததாக தெரிவித்தார். ஆனால் அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
சிரியா போரில் ரஷ்யா சிரிய அரசுக்கும் அமெரிக்கா சிரியா அரசை எதிர்க்கும் திவிரவாத குழுவுக்கும் உதவி அளித்து வருவது குறிப்பிடதக்கது.இதனால் இந்த போர் முடிவடையாமல் பல வருடமாக தொடர்ந்து வருவதால் பல் லட்ச அப்பாவி சிரிய பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.