சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய பாடத்திட்டங்களை நீக்கியதற்கு காங்கிரஸ், திமுக, மதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் நிதி மய்யம் உள்பட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுனங்கள் திறக்க தாமதமாவதால், 9 முதல் 12 வகுப்புகளுக்கு 30% பாடங்கள் குறைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது. இந்நிலையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதசார்பின்மை, அண்டை நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர் பணமதிப்பிழப்பு ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்களின் படிப்பு சுமையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சிபிஎஸ்சி எடுத்துள்ள இந்த முடிவை எதிர்த்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போதுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாட திட்டத்தை சிறிது குறைப்பது நல்லது தான், ஆனால் முக்கிய பாடங்களான கூட்டாட்சி முறை, மதசார்பின்மை, மற்றும் குடியுரிமை போன்ற பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து எக்காரணத்தினாலும் குறைக்க கூடாது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளார்.
Shocked to know that the Central Govt has dropped topics like Citizenship, Federalism, Secularism & Partition in the name of reducing CBSE course during #COVIDCrisis.
We strongly object to this & appeal @HRDMinistry, GoI to ensure these vital lessons aren't curtailed at any cost. https://t.co/pkBaVI4VKM— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020
மேலும் வாசிக்க: கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட முக்கிய பாடங்களை நீக்கிய சிபிஎஸ்இ…
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது பதிவில், மதச்சார்பின்மை, குடியுரிமை, ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட அத்தியாயங்கள்!
நீக்கப்பட்ட பாடங்களுக்கு பதிலாக அவர்கள் மாணவர்களின் மன அழுத்ததைப் போக்கும் பஸ்டர்களாக மெய் காம்ப், கு க்ளக்ஸ் கிளனின் வரலாறு மற்றும் மார்க்விஸ் டி சேடின் ஜஸ்டின் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று கிண்டலடித்துள்ளார்.
Secularism, Ctizenship, Democratic rights and GST are the chapters deleted from the CBSE syllabus to reduce students' stress!
Probably, they should add Mein Kampf, the History of Ku Klux Klan and Marquis De Sade's Justine as students' stress busters!
— Kamal Haasan (@ikamalhaasan) July 9, 2020