நேபாள அரசுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாக தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் செய்தி சேனல்களுக்கும் நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது.

அண்ணமைக் காலமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூன்று பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி திடீரென வரைபடம் வெளியிட்டு, அதற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

நேபாள பிரதமர் சர்மா ஒலி, கொரோனா வைரஸைவிட, இந்திய வைரஸ் மோசமானது என்று விமர்சித்தார். இந்திய எல்லையில் சாலை அமைக்கக் கூடாது எனவும், இந்தியாவிற்கு எதிராக நேபாள அரசு தொடர்ந்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் நேபாள அரசுக்கு எதிராகத் தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக குற்றம்சாட்டி, தூர்தர்ஷன் தவிர அனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இன்று (ஜூலை.09) மாலை முதலே தனியார் செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகவில்லை என்ற தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க: சமூக முடக்கம், மாஸ்க் தேவையில்லை எனக் கூறிவந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா..