சட்டக்கல்லூரி மாணவி தொடுத்த பாலியல் வழக்கியிலிருந்து முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சின்மயானந்தை விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்த் (வயது 75), முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தவர். தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில், சட்ட கல்லூரி நடத்தி வருகிறார்.
சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிக்கு சுவாமி சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரில், தான் சின்மயானந்த்தால் ஒரு வருடமாக பாலியல் ரீதியாக தன்னை சுரண்டப்பட்டுவந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 376 (C) பிரிவின் கீழ் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலையானார் சின்மயானந்த்.
இந்த வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது மசாஜ் செய்யவே மாணவியை அழைத்ததாக தெரிவித்திருந்தார் சின்மயானந்த்.
[su_image_carousel source=”media: 22809,22810″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
இதனிடையே, தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டதாக சுவாமி சின்மயானந்த் சார்பில் காவல் நிலையத்தில் மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அந்த மாணவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை காவல்துறையினர் சமர்ப்பிக்கவில்லை. மாணவி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள் இல்லை. ஆதலால், அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே.ராய் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகார்: எங்கள் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென பாஜக அமைச்சர்கள் மனு