தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 49 பேர் உயிரிழந்துள்ளனர். 58 அணைகளில் 33 அணைகளில் தண்ணீர் திறப்பால் கேரளா முழுவதும் வெள்ளக்காடானது.
இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதத்தை முதற்கட்டமாக கணக்கிட்டதில் சுமார் 8,316 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் வீடுகளும், பொதுப்பணித்துறையின் கீழ் போடப்பட்ட 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் ஆகஸ்ட் 18-ம் தேதி மதியம் 2 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கண்ணூர், காசர்கோட், மலப்புரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் எர்னாகுளம் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கை அடுத்து படம்பி பாலம் மூடப்பட்டுள்ளது.
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் நாளை தொடங்குகிறது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த பண்டியை அரசின் சார்பாக பல இடங்களில் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசின் சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டியை ரத்து செய்யப்பட்டு அந்த பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் என பினராயி விஜயன் நேற்று அறிவித்தார் .
மொத்ததில் வரலாறு காணாத மழையால் கேரளாவின் 8 மாவட்டங்கள் தத்தளித்து வருகிறது
Tags: