நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்த பின்னர் ஒரு நோயாளி போல காட்சி அளிக்கின்றார் என சர்ச்சை கருத்தை ஸ்ரீ ரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என எங்கும் பரவியிருக்கிறது என சர்ச்சை கருத்தை கூறியுள்ளதோடு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரை நிர்வாண போராட்டம் செய்தவர்.
தெலுங்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் ராகவா லாரன்ஸ், ஏ ஆர் முருகதாஸ் முதலானவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ஶ்ரீரெட்டி. அண்மையில், விஷால் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
தனது முகநூல் பக்கத்தில், விஷால் நீங்கள் பல பெண்களை ஏமாற்றியுள்ளது எனக்குத் தெரியும். நீங்கள் உண்மையாகவே யாரையும் ஏமாற்றவில்லை என்றால் நிரூபியுங்கள். விஷால் ஒரு ஏமாற்று பேர்வழி. என் அம்மாவின் மீதும், என் தொழிலின் மீதும் சத்தியம் செய்து சொல்கிறேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு சர்ச்சை பதிவை ஸ்ரீரெட்டி பதிவிட்டிருந்தார். அதில் “கீர்த்தி சுரேஷும், நானும் ஒரே விமானத்தில் சென்றிருந்தோம். ஆனால் அவர் உடல் எடை குறைத்திருந்ததால் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் என்னை அனைவரும் அறிந்து கொண்டு என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைத்து நோயாளி போல காணப்படுகிறார். அவர் நடித்த மகாநடிகை படம் இயக்குனரால் தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷால் அல்ல. தற்போது சாய் பல்லவி சிறப்பாக முன்னேறி வருகின்றார்” என பதிவிட்டுள்ளார். இப்பதிவால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை திட்டி வருகின்றனர்.