ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு கொன்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் மரணமடைந்துள்ளார். மேலும் 6 சிவில் மக்களும் காயம் அடைந்து உள்ளதாக ஏஜென்சி தகவல்கள் கூறுகின்றன
 
ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த (சிஆர்பிஎப்) 2500 வீரர்கள் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த 14-ம் தேதி 78 பஸ்களில் சென்று கொண்டிருந்தனர்.
 
புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.
 
அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தியதால் . இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது.
 

மேலும் வாசிக்க : ராணுவ வீரர்கள் 10000 பேர் காஷ்மீரில் குவிப்பு .. அம்மாநில தலைவர்கள் கண்டனம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர்.
 
இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதற்கு பதிலடி தாக்குதல் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்நிலையில், குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு கொன்றனர். மேலும் அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.