ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரும் வழக்கில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, எஸ்.பி. சண்முகநாதன், என். மனோரஞ்சிதம், எஸ்.எஸ். சரவணன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கே. மாணிக்கம், ஏ. மனோகரன் ஆகியே 11 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.