கொரோனா ஊரடங்கின்போது ஏழை குடும்பங்களுக்கு உதவிய மதுரை சலூன் கடைகாரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். இவர், தனது மகள் நேத்ராவின் மேற்படிப்புக்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளார். இதனையடுத்து மோகன் மற்றும் நேத்ராவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அவரது மகள் நேத்ராவின் கல்விக்கு உதவிகளும் குவிந்து வந்தது.
13 வயதான நேத்ரா தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்காக கொடுத்துள்ளதை ‘மான் கீ
பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்த நிலையில்.,
பிரதமர் மோடி பேசி முடிதவுடனே பாஜக கட்சியில் சேர பாஜகவினர் அவரின் வீடு சென்று உறுப்பினர் அட்டை கொடுத்ததும் அந்த குடும்பமே பதறி போய் பாஜக கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது பாஜகவுக்கு பெரும் அவமானமாக முடிந்தது.
இந்நிலையில், நேத்ராவை ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான (United Nations Association for Development and Peace) ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவித்து கவுரப்படுத்தியுள்ளது. அதேபோல் நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.
மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடைபெறும் வறுமை தொடர்பான மாநாட்டிலும் பேச மாணவி நேத்ராக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நேத்ரா, “உலகம் முழுவதும் வறுமையே இருக்கக் கூடாது என்பதே எனது ஆசை என்றும்,
மேலும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்றும்.,
சாதாரணமாக செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் வாசிக்க: கேரள யானை மரணதிற்கு நீதி கேட்டு தொடங்கிய கையெழுத்து இயக்கம்