210 மிலியன் வருடங்களாக கொசுக்கள் ஜுராஸிக் காலத்தில் இருந்து வாழ்பவை வருடத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மலேரியா நோய்கண்டு இறக்கின்றனர். விதம் விதமான கொசு ஒழிப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் எல்லாம் தற்காலிகமாகிப் போய்விடுகின்றன. அவற்றில் இருந்து மீண்டு மீண்டும் மீண்டும் மனிதனை தாக்குகின்றன.
கொசுக்களில் 3500 வகைகள் இருக்கின்றன. அவற்றில் 175 வகைகள் அமெரிக்காவிலும், “ஏசியன் டைகர்” (Aedes aegypti) என்பது எல்லா இடங்களிலும் இருப்பது. மலேரியா கிருமிகளை சுமந்து செல்பவை அனோபெலிஸ் ( Anopheles)
கொசுக்களில் பெண் கொசுக்கள் தான் மனிதர் ரத்தங்களை ருசிக்கிறது. அதற்கு முட்டைகளை உருவாக்க மனித ரத்தம் தேவையாகிறது.அவைகள் அவற்றின் தலையில் உள்ள நுண் சென்சார் மயிர் கால்கள் மூலமாக மனிதனின் மூச்சு காற்றும் மற்றும் வியர்வை வாசனையை வைத்து துள்ளியமாக ரத்தம் உறிஞ்சும் பகுதியை கண்டுபிடிக்கின்றன அதுமட்டும் அல்ல வெப்ப அளவீடுகளைக் கொண்டும் டார்கெட்டை துரத்திப் பிடிக்கின்றன.
கொசு கடித்துவிட்டது என்று சொல்லுகிறோம் உண்மையில் அவைகளுக்கு பற்கள் இல்லை. அவைகள் நீளமான நுண் துளை (proboscis) உறிஞ்சிகளை வைத்து அவை ரத்தத்தை உருஞ்சுகின்றன. நுண் உறுஞ்சிகளை நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் இரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. அந்த சிறு இடத்தில் கொஞ்சம் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. அதோடு மரத்துப்போதலும் ஏற்படுகிறது, அதனால் தான் அது கடிப்பது சட்டென உணர முடிவதில்லை. பெரும்பாலும் அது ரத்தத்தை உறிஞ்சிய பின்பே நமக்கு எரிச்சலும் வலியும் உணரப் படுகிறது.மலேரியா நுண்கிருமிகள் அதன் எச்சில் மூலம் நம் உடலில் புகுந்து தாக்குதல் நடத்துகின்றன.
அதனுடைய எடையை விட மூன்று மடங்கு எடையுள்ள ரத்தத்தை குடித்துவிடுகின்றன. ஒரு பெண் கொசுவானது ஒரே சமையத்தில் 300 முட்டைகளை இட வல்லது. இதுமாதிரி ஒரு பெண் கொசுவானது அதன் வாழ்நாளில் மூன்று தடவைகள் முட்டைகளை இடுகின்றன.
நீர் பரப்புகளின் மேலே இடப்பட்ட முட்டைகள் 10 நாட்களில் லார்வா, அப்புரம் ப்யூபா வடிவம் பெற்று அடுத்த சில நாட்களில் ரெக்கை முளைத்த கொசுக்களாகின்றன. ஒரு கொசுவின் வாழ்நாள் 2 மாதங்கள் சில வகைகளுக்கு ஆயுசு 3 மாதங்கள்.
பெண் கொசுக்கள் றெக்கையை நொடிக்கு 500 தடவைகள் வேகமாக அசைக்கின்றன. காற்றில் அவைகள் ஏற்படுத்தும் ஒலியானது ஆண் கொசுக்களை கவர்கின்றன. பறக்கும் வேகம் மணிக்கு 1.5 மைல்கள்.8000 அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில் கூட இவை வாழ்கின்றன.
அய்டீஸ் (Aedes) வகை கொசுக்கள் பகல் நேரத்தில் ரத்தம் உறிஞ்சுபவை. க்யூலெக்ஸ் (Culex) வகை இரவானதும் தன் வேலையை துவக்கும்.கொசுக்களுக்கு ஆங்கிலத்தில் “Mosquito ” ஸ்பானிய மொழியில் “சிறிய ஈ (அ) சிறிய பூச்சி” என்று அர்த்தம். 16 ஆம் நூற்றாண்டில் இருந்து அந்த மொழியில் இந்த வார்த்தை இருகிறதாம். ஆப்பிரிக்க மொழியில் இதை “மொஸீஸ்” என்கின்றனர். இலங்கையில் கொசுவை “நுளம்பு’ என்று வழங்குகின்றனர்