நாடு முழுவதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி அடிப்படையில்  வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு என சுமார் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
 
ஆனால் பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுவது இல்லை. எனினும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வெங்கும் உள்ள 6%  அந்த சாதி மக்கள் பாஜக அரசிடம் கோரினார் 
 
இதைத்தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அரசியல் சாசன திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதற்காக அரசியல் சாசனத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பொதுப்பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும்.
 
அதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் ( அதாவது மாதம் 66,666 வரை ) பெரும் உயர்சாதிமக்கள் 
5 ஏக்கர் வரை நிலம் கொண்டிருக்கும் உயர்சாதிமக்கள் 
1000 சதுரடி வீடு வரை நகர்புறத்தில்  வைத்து இருக்கும் உயர்சாதிமக்கள் 
இந்த இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.