8 லட்சம் வரைக்கும் வருடாந்திர வருமானம் உள்ள உயர்சாதி பிரிவினருக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது
 
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
பா.ஜ.க ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட பிற்படுத்தப்பட்டோர் 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு என ஜெட் வேகத்தில் அறிவிப்பு வெளியிடுவதன் பின்னணி என்ன எனறு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில்   திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அதில் அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட காட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது.
 
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்த மனுவில், மத்திய அரசின் சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. மத்திய அரசின் வேலை மற்றும் கல்விகளில் இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
 
இந்த நிலையில் மத்திய அரசே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 10% இடஒதுக்கீடு கூடுதலாக வழங்குவதாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.