வரும் 19-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
 
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்த பொதுக் கூட்டம் கருதப்படுகிறது. பொது கூட்டத்தின் ஏற்பாடுகளை பார்வையிட வந்த போது செய்தியாளர்களை சந்தித்த மம்தா பாஜக 125 இடங்களை வெல்வதே கடினம் என்றார் ..
 
இந்த கூட்டத்தில்   காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி தனது ஆதரவுக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், மம்தா பானர்ஜிக்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு இதன் மூலம் ஒரு செய்தியை நிச்சயம் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
 
உண்மையான தேசப்பற்று மற்றும் வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளோம். ஜனநாயகத்தின் தூண்களையும், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையையும் எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க முடியும்.
 
ஆனால், பாஜக மற்றும் மோடி தலைமையிலான அரசு இவற்றை அழிக்கும் கொள்கைக் கொண்டவை. அந்த எண்ணத்தை நாம் அழிக்க வேண்டும். அதற்கான பணியில் முன்னிலையில் இருக்கும் மேற்கு வங்க மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
 
பொய் உறுதி மொழிகள் மற்றும் பொய் மூட்டைகளால் ஆன மோடி அரசின் மீதான கடும் வெறுப்பு மற்றும் அதிருப்தி கொண்ட மக்களைக் கொண்ட பெரும் படை உருவாகி வருகிறது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
மாயாவதியும் தனது கட்சியில் உள்ள் முக்கிய தலைவர்களை அனுப்பிய நிலையில் , ராகுல் காந்தி கடிதமும் சேர இந்த ஒன்றாகும் எதிர்கட்சிகள் முடிவால் மோடி  அதிர்ச்சி அடைந்து இருப்பதாக பாஜக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன