டெல்லியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு “சபாக்” என்ற பெயரில் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகிறது. இப்படத்தில் லக்ஷ்மியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். தீபிகாவின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த லட்சுமி அகர்வால் என்ற 15 வயது பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லட்சுமியை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுத்து, அதை ஏற்காததால் லட்சுமி மீது ஆசிட் வீசினான். இதில் லட்சுமி முகம் வெந்து தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.
தற்போது புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுவோருக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆசிட் விற்பதை ஒழுங்குபடுத்தியும், ஆசிட் வீசுவோருக்கு அதிக தண்டனையை அறிவித்தும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகாவுக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்களால் தீபிகாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
தற்போது லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது. இதில் லட்சுமியின் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்து, தயாரிக்கிறார். படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் மாலதி.
மேலும், இப்படத்தில் நடிக்கும் தனது முதல் தோற்றத்தை தீபிகா படுகோனே டுவிட்டரில் வெளியிட்டு, “எனது சினிமா வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.
சபாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.