இந்தியா தலைநகர் டெல்லியில் நபர் ஒருவர் பசிக் கொடுமை தாங்க முடியாமல், சாலையில் அடிபட்டு கிடந்த நாயின் சடலத்தை சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதற வைக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமுலில் உள்ளது. சில தளர்வுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டாலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு காரணமாக கடும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், நாய் ஒன்று விபத்தின் காரணமாக அடிபட்டு சாலையில் இறந்து கிடக்கிறது. அதை நபர் ஒருவர் பசி தாங்க முடியாமல் அந்த நாயின் சடலத்தை சாப்பிடுகிறார்.
மேலும் வாசிக்க: கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகள்- உயர்நீதிமன்றம் கேள்வி
அப்போது அந்த வழியே சென்ற நபர் ஒருவர், அதை சாப்பிடாதே என்று கூறியும், அவர் தொடர்ந்து சாப்பிட முயற்சி செய்ய, உடனே சாப்பாடு மற்றும் தண்ணீரை அவருக்கு கொடுக்கிறார்.
இதையடுத்து அந்த நபர் அந்த சாப்பாடு மற்றும் தண்ணீரை குடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி பார்ப்பவர்களை கலங்கச் செய்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல லட்சம் குடும்பங்கள் ஏழ்மையில் சிக்கி தவிக்கும், ஏராளமானோர் பசிக் கொடுமை தாங்க முடியாமல் இறப்பார் என்று புள்ளி விவரங்கள் கூறிவரும் நிலையில், இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் அதற்கு உதாரணமகா நடந்துள்ளது.