தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் கடும் எதிர்ப்பை எதிர்பாரா மத்திய அரசு மும்மொழி கொள்கை பிரச்சினையில் வேறு வழியின்று  பணிந்துள்ளது.
 
 முன்னதாக 370  தொகுதிக்கும் மேல போடபட்ட ஓட்டுக்கும் எண்ணிய ஓட்டுக்கும் வித்தயாசம் வந்த நிலையில் தேர்தல் ஆணையம் மவுனம் மட்டும் சாதிக்கவில்லை .ஆதன் வலைதளத்தில் இருந்த அதிகாரபூர்வ போட்ட ஓட்டுகள் தகவலையும் நீக்கிய சர்ச்சை தொடர்ந்த நிலையில்., 
 
உலக அளவில் #stophindiimposition  ஹாஷ்டாக்  டிரண்டாகி  புதிய பிரச்சனையில் தலை குனிந்த மோடியின் மத்திய அரசு   தேசிய கல்வி கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 
 
இந்தியாவின் அதிக அளவு எம்ப்பிக்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக மும்மொழி திட்டம் என்று தமிழர்களை உரசி பார்க்காதீர்கள் என திமுக கூட்டத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றிய நிலையில் .,

1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டதில் உயிர் துறந்த திமுக கட்சியினர்

இதன்  மூலம் மும்மொழி கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
 
மேலும் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை குறித்து ஜுன் 30-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக எம்பி சம்பத்துக்கு அன்றைய பிரதமர் நேரு ஹிந்தி திணிப்பு கிடையாது என கொடுத்த உறுதிமொழி

முன்னதாக  கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கையால் எழுந்துள்ள கொந்தளிப்பான சூழலை தணிக்கும் வகையில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் ட்விட்டர் பக்கங்களில் விளக்கம் அளித்தனர். இந்தி உட்பட எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி மொழிகளை வழங்கினர். 
 
ஆனால் சமூக வலைதளத்தில் நீட் தேர்வில் நிர்மலா சீதாராமன் அளித்த வாக்குறுதியை போல தான் இதுவும் தில்லாங்கடி அறிவுப்பு என கொதித்து பதிவுகளை போட்டு தாளித்தனர் 
 
இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வரைவு அறிக்கையை மக்கள் ஆய்ந்தறியாமல் தவறான முடிவுக்கு வர கூடாது என்று கேட்டுக் கொண்டார். 
 

சொற்ப மாநிலத்தின் மொழியே இந்தி என பெருவாரியாக சமூகவலை தளத்தில் பகிரப்பட்ட படம்

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை வழக்கம் போல் தமிழகம் திமுக உள்ளிட்ட பாஜக வின் அதரவு கட்சி அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும்   தீவிரமாக முன்னெடுக்க, மேற்குவங்கம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஆதரவு கரங்கள் நீள தொடங்கின . 
 
இதனால் இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வு வீரியம் பெறுவதை உணர்ந்த மத்திய அரசு, மும்மொழி கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று வேறு வழி இல்லாமல்  மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.