பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைன் தடைவிதித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாங்களை குறிவைத்து பிப்ரவரி-26ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியத் திரைப்படங்களுக்குப் பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியப் படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹூசைன் கூறியுள்ளார். இந்திய விளம்பரங்களைப் புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது