பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணி சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு ஆம் ஆத்மி கட்சியினரும் பேரணியில் பங்கேற்ற போராட்டம் ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கள் பிரச்சனையில் மோடி அமைதியாக இருக்கிறார் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி மோடி பேசவில்லை என்றும் கூறிய அவர்.,

விவசாயிகளின் கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத மோடி பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து வாய் திறக்கவில்லை என்று சாடினார் மேலும் ராகுல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது என்றும் கூறிய போது அவரின் பேச்சுக்கு அங்கு குழுமி இருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.

மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.இதில் 14 பேருந்துகள் சேதமடைந்து உள்ளன. இவற்றில் மத்திய மும்பை மற்றும் செம்பூர் புறநகர் பகுதியில் அதிக அளவிலான பேருந்துகள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டன.

நவநிர்மாண் சேனாவை சேர்ந்த உறுப்பினர்கள் முதல் மந்திரி பட்னாவிசின் பாதுகாப்பு வாகனத்தினை சித்தி விநாயகர் கோவில் அருகே தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.இதேபோன்று அக்கட்சியினர் திண்டோஷி பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த வினோத் மிஷ்ராவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். பேருந்துகளின் டயர்களை சேதப்படுத்தினர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் போராடத்தின் போது மோதல் வெடித்தது காரணமாக காங்கிரஸ் – பா.ஜனதா தலைவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். மோதல் வெடித்ததை அடுத்து உடுப்பி மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின் போது கற்கள் வீசப்பட்டதில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர் பிரபாகர் பூஜாரி காயம் அடைந்துள்ளார். அவருடைய தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீஸ் நடத்திய தடியடியின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் கஞ்சானும் காயம் அடைந்துள்ளார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் தொடங்கி ஜந்தர் மந்தர் வரை பேரணி இடதுசாரி அமைப்புகளும் பேரணியில் கலந்து கொண்டது எதிர்கட்சிகள் ஒன்றினந்ததை காட்டுவதாக இருந்தது.

சென்னை அண்ணாசாலையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஎம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அண்ணா சாலையில் 2 இடங்களில் போராட்டம் பாரத் பந்த் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

தமிழகத்தின் திமுக வும் கலந்து கொண்ட இந்த போரட்டத்தில் பல பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், லாரிகள் இயங்கவில்லை. ஆனால் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பெரிதாக பாதிப்பில்லை.

முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் இடதுசாரிக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடின. தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டன. காங்கிரஸ் அழைப்பின் பேரில் நடந்த பந்த் 3.30 மணிக்கு மேல் நிறைவு பெற்றதால் பல்வேறு இடங்களில் மாலை கடைகள், பேருந்துகள் செயல்பட துவங்கியது பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது