ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது, கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பங்கேற்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலை தொடங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்ற திரைப்படங்கள், பிரபலங்கள் விவரம் வெளியாகி உள்ளது.
இதில் போகிமியான் ராஃப்சோடி படம் அதிகபட்சமாக சிறந்த நடிகர் உட்பட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிளாக் பேந்தர், ரோமா படங்கள் தலா 3 ஆஸ்கர் விருதுகளை வென்றன. கிரீன் புக் உள்ளிட்ட படங்கள் தலா 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.
சிறந்த படம் – கிரீன் புக்
சிறந்த இயக்குநர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)
சிறந்த நடிகர் – ரமி மாலக் (போகிமியான் ராஃப்சோடி)
சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மேன் (த ஃபேவரைட்)
சிறந்த ஆவணப்படம் – எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ப்ரீ சோலோ)
சிறந்த வெளிநாட்டு படம் – ரோமா (மெக்ஸிகோ)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஸ்பைடர் மேன் – இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்
சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவ்
சிறந்த ஆவண குறும்படம் – பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ஸ்கின்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்
சிறந்த ஒளிப்பதிவாளர் – அல்போன்சோ குவாரோன் (ரோமா)
சிறந்த படத்தொகுப்பாளர் – ஜான் ஓட்மேன் (போகிமியான் ராஃப்சோடி)
சிறந்த திரைக்கதை – நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன் புக்)
தழுவல் திரைக்கதை – சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்)
சிறந்த பின்னணி இசை – லட்விக் கோரன்சான் (பிளாக் பேந்தர்)
சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)
சிறந்த துணை நடிகர் – மஹர்ஷலா அலி (கிரீன் புக்)
சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங் (இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)
சிறந்த ஒப்பனை – கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)
ஆடை வடிவமைப்பு – ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)
தயாரிப்பு வடிவமைப்பு – ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)
சிறந்த ஒலி படத்தொகுப்பு – ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ராஃப்சோடி)
ஒலி கோர்ப்பு – பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ராஃப்சோடி)