தமிழக அரசின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடு செய்திருப்பதாக திமுக சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவையில் எல்.ஈ.டி. விளக்குள் பொருத்தும் பணிக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு நடந்திருக்கிறது என்றும் .,
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளிலும் முறைகேடு நடந்துள்ளது என்றும் திமுக குற்றம் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆலந்தூரில் உள்ள லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு இயக்குனரிடம் கடந்த செப்.10ம் தேதி புகார் அளித்தார்.
ஆனால் அந்த புகார் மனு தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் மனு தாக்கலின்போது எஸ்.பி.வேலுமணி ஊழலில் ஈடுபட்டதாக 3,000 ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை, கோவை மாநகராட்சிகளைக் குறிவைத்து ஆய்வுசெய்து, பல தகவல்களைத் திரட்டியுள்ளார்கள். இதுகுறித்து, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கூறுகையில், ”சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல்களை 3,000 பக்கத்தில் ரெடி பண்ணியிருக்கிறோம்.
இந்த மாநகராட்சிகளில், 7 நிறுவனங்கள் மட்டுமே அனைத்து டெண்டர்களையும் மாற்றி மாற்றி எடுத்துள்ளன.இவை அனைத்தும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான், துணிச்சலாக இந்த முறைகேடுகளை அதிகாரிகள் துணையோடு அவர்கள் செய்துள்ளார்கள்.
1,300 ரூபாய் மதிப்புள்ள ஒரு எல்.இ.டி பல்பை 6,000 ரூபாய் என்று சப்ளை செய்துள்ளார்கள். அதேபோல, குப்பை அள்ளும் ஒரு சைக்கிள் ரிக்ஷா ரூ.7,500-க்கே கிடைக்கிறது. ஆனால், அதற்கு ரூ.35,000 என்று விலை நிர்ணயித்து வழங்கியிருக்கிறார்கள்.
இப்படி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் நடந்துள்ள ஊழல்களைத் தோண்டித்துருவி எடுத்து ஆதரத்தை தருவித்துள்ளோம் என கூறினார்
ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் குட்கா ஊழல் வழக்கு திமுக சார்பில் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.