அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா, தமிழில் நடித்து வெளியாகவுள்ள “நோட்டா” அக்டோபர் 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தலைப்பை பார்த்தாலே இது அரசியல் சார்ந்த படம் என்பது அனைவருக்கும் புரியும். இப்படத்தின் புரோமோசனில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய விஜய் தேவரகொண்டா, “தமிழகத்தின் அரசியல் நிலைமை தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை தான். ஆனால், இதை தைரியமாக விமர்சிக்க இங்கு ஒருவரும் இல்லை.
தமிழகத்தில் ஏன் ஹெலிகாப்டர் மேலே போகும் போது கீழே குனிஞ்சு நிற்கின்றீர்கள், பார்க்கவே செம்ம காமெடியாக உள்ளது. மேலும், சட்டை போட்டு வெளியே தெரியும்படி புகைப்படம் வைப்பது என பல விஷயங்களை கேள்விப்பட்டுள்ளாதாகவும், தன் படத்திலும் இந்த மாதிரியான காமெடி சீன்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் தலைவரை பார்த்ததும் கும்பிடு போடும் கட்சியினரை பார்த்து நாசர் நிமிர்ந்து என் முகத்தை பாருங்கய்யா, இல்லை என்றால் எனக்கு சிலை செய்தால் என் முகத்திற்கு பதில் வேறு யார் முகத்தையாவது வைத்துவிடுவீர்கள் என்று கூறும் காட்சி உள்ளது.
தமிழகத்தில் யாரை பார்த்தால் கட்சியினர் இந்த அளவுக்கு குனிந்து கும்பிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி கும்பிடு போட்டவர்கள் சிலை வைத்தது ஒருவருக்கு ஆனால் அதன் முகம் வேறு ஒருவர் போன்று இருந்த கொடுமை இங்கு நடந்துள்ளது. இதை தான் கிண்டல் செய்து படத்தில் காட்சி வைத்துள்ளனர்.
படத்தில் வரும் காட்சிகளை பார்த்தால் தவறு செய்தவர்களுக்கு மட்டுமே உறுத்தும். மற்ற அரசியல்வாதிகள் பொது மக்களுடன் சேர்ந்து ரசிக்கும்படி இருக்கும்” என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
நோட்டா படத்தை எதிர்த்து பேட்டி கொடுத்தால் விஜய் தேவரகொண்டா கூறியது உண்மையாகிவிடும். தவறு செய்ததை தாமாக வந்து ஒப்புக் கொண்டது போன்றாகிவிடும். அதனால் படம் திரைக்கு வரும்போது எப்படி எதிர்ப்புகள் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.