மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் அணிதிரண்டு போராட்டம் நடத்தி டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை உத்தரப் பிரதேசம், அரியானா எல்லைகளில், காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்ததும், விவசாயிகள் வாகனங்களில் வருவதைத் தடுக்க அரசாங்கமே சாலைகளில் பள்ளம் தோண்டிம் தடுத்தனர்.
விவசாயிகள் போராட்டம் அதி தீவிரமானதால், இறுதியில் மத்திய பாஜக அரசு அவர்களைத் டெல்லிக்குள் விடுவதற்கும், புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் கூடுவதற்கும் அனுமதித்தது. இந்நிலையில், டெல்லியை நோக்கி சுமார் 80 கிலோ மீட்டருக்கும் மேலாக விவசாயிகளின் அணிவகுப்பு நீண்டிருக்கிறது.
போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு… டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்
இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “விவசாயிகள் அனைவரும் போலிஸார் மாற்றம் செய்யும் இடத்திற்கு செல்லுங்கள். நீங்கள் அங்கு போராட்டம் நடத்த போலிஸ் அனுமதி வழங்கப்படும். டிச.,3 ம் தேதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் முதலில் மைதானத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்ற அடுத்த நாளே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
[su_image_carousel source=”media: 19412,19413″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய மோடி அரசு, மறுபுறம் போலிஸ் தடுப்புகளை அகற்றிவிட்டு, பேரணி சென்றதாக 10,000 விவசாயிகள் மீது பெயர் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அமித்ஷாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை. இந்தியா முழுவதுமுள்ள விவசாயகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்துகொண்டிருக்கிறார்கள்.
[su_image_carousel source=”media: 19414,19415″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
புதிய வேளாண் சட்டங்கள் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டிவிடும், உணவு உற்பத்திச் செலவினங்கள் உயர்ந்துவிடும், கறுப்புச் சந்தை கொடிகட்டிப் பறக்கும், மற்றும் உணவுப் பாதுகாப்பு அரித்து வீழ்த்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறுகிறார்கள்.
இந்த இயக்கம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த அளவிற்கு விவசாயிகள் இதற்கு முன் திரண்டது இல்லை. இப்போதாவது அரசாங்கம் உண்மை நிலையினை உணர்ந்து விவசாயிகள் மீதும் போராடும் சங்கங்கள் மீதும் அவதூறை அள்ளிவீசுவதை நிறுத்திக் கொண்டு பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிரடி