தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது.
 
இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலுக்கும் இப்போது தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
 
பொதுவாக ஒரு தேர்தல் நடக்கும் போது மாநிலம் முழுக்க இருக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார். முக்கியமான ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள். போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். சந்தேகம் உள்ள அதிகாரிகள் தேர்தல் சாராத பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
 
ஆனால் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததில் இருந்து இன்று வரை அப்படி எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
 
இதுவரை மாவட்ட ஆட்சியர்கள் யாரும் தேர்தலுக்காக மாற்றப்படவில்லை. தேர்தலின் போது அதிக கவனத்திற்கு உள்ளாகும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் மாற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் மாவட்ட காவல் ஆணையர்கள், எஸ்.பிக்கள் தேர்தலின் போது மாற்றப்படுவதே எப்போதும் நடக்கும். ஆனால் அப்படி இந்த தேர்தலில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை.
 
மற்ற மாநிலங்களில் எல்லாம் பல ஆயிரக்கணக்கான அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் யாரும் மாற்றப்படவில்லை.
 
தமிழக அதிமுக அரசு நியமனம் செய்த அதிகாரிகள்தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார்கள். முதல்முறையாக ஒரு அரசு நியமித்த அதிகாரிகளை வைத்து தேர்தல் நடக்கிறது என்பது இதுவே முதல்முறையாகும்.
 
இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் ஆளும் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இப்படி தேர்தல் நடத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.