லக்னோவில் உள்ள “ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: 77
1. Assistant (Admin/ Accounts) – 10
தகுதி: எம்.காம் முதுகலை பட்டத்துடன் கணினி இயக்குவதில் 3 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11050 – 28970

2. Assistant (Q.C./ Inspection) / Assistant (Commercial) – 32
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11050 – 28970

3. Assistant (Civil Works) – 1
தகுதி: சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11050 – 28970

4. Operator (Fitter, Electrician, Electronics Mechanic, Instrument Mechanic) – 34
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 10,750 – 27,670

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200. கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2019

விண்ணப்பிக்கும் முறை: ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HINDUSTAN AERONAUTICS LIMITED) என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…