தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வீரராக விஜய் சங்கர் திகழ்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி உடன் புகைப்படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சங்கர் பதிவிட்டுள்ளார். அவருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இவர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் என முன்னரே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படம் வரும் 29ஆம் தேதி, வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.