பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விஜயா வங்கியில் காலியாக உள்ள 330 புரபெஷனரி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள்: Probationary Assistant Manager (Credit) – 330

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2018

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று நிதியியல் துறையில் எம்பிஏ, முதுகலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chartered Accountant, ICWA, Company Secretary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: VIJAYA BANK என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…