வங்கியில் ரூ. 5,000 கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் நைஜீரியாவுக்கு மேலும் ஒரு குஜராத்தி தொழிலதிபர் நிதின் சந்தேசரா தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்தி வருபவர் நிதின் சந்தேசரா. இவர் பல்வேறு வங்கிகளில் ரூ. 5,000 கோடி வரை கடன் பெற்றுள்ளார். ஆனால், திரும்ப செலுத்தவில்லை. இந்த நிலையில் இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து தேடி வந்தது. இதற்கிடையே இவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், இவர் கைது செய்யப்படவில்லை, குடும்பத்துடன் நைஜீரியாவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் தனது சகோதரர் சேட்டன் சந்தேசரா அவரது மனைவி தீப்திபென் சந்தேசா ஆகியோருடன் நிதின் சந்தேசரா தஞ்சம் புகுந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நைஜீரியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் குற்றவாளிகளை நாடு கடத்தல் தொடர்பான ஒப்பந்தம் இல்லாததால் நிதினை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், “மீண்டும் ஒரு குஜராத்தி சட்டவிரோதமாக தப்பி ஓடியுள்ளார். நீங்கள் இந்தியாவுக்கு கறுப்புப் பணத்தை கொண்டு வருவதாகக் கூறினீர்கள். ஆனால், தற்போது அதற்கு எதிர்மாறாக நடந்து கொண்டுள்ளது. சாதாரண இந்திய குடிமகனின் பண மதிப்பு நீக்கப்படுகிறது” என்று பாஜக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்குமுன், பெட்ரோல் விலை குறித்து பாஜகவின் ட்டுவிட்டர் பக்கத்தில் ஒரு கிராஃப் கணக்கு கூறியிருந்தார்கள். இந்த கிராஃப் குறித்து நடிகர் சித்தார்த் தனது பதிவில், “கோபர் கேஸ் தயார் செய்ய அன்று பணம் தேவைப்பட்டது. இன்று ட்டுவிட்டரிலேயே அது இலவசமாகக் கிடைக்கின்றது. இந்த கிராஃப் முரணின் உச்சம்” என விமர்சித்திருந்தார்.

அதற்கு பாஜக ஆதரவாளர் ஒருவர் நடிகர் சித்தார்த்தை விமர்சித்து இழிவான வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார். பின்னர் அப்பதிவை நீக்கிவிட்டார்.

இதற்கு “நமது பிரதமரை இழிவான வார்த்தைகளால் விமர்சிக்காதீர்கள். நான் அதை ஏற்க மாட்டேன்” என நக்கலாக நடிகர் சித்தார்த் பதில் அளித்து பலரது பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி, பொய்யான தகவல்கள் பரப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் இந்துத்துவா தீவிரவாதி என்றும் இடியட் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா எனத் தொடர்ந்து பாஜகவை நடிகர் சித்தார்த் விமர்சித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

தொடர்பு செய்திக்கு: இந்துத்துவா தீவிரவாதி என்றும் இடியட் என்றும் பாஜக தேசிய செயலாரை விளாசும் நடிகர் சித்தார்த்