பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘ARNAB- THE NEWS PROSTITUTE’ என்ற படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மோடி அரசிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படும் ரிபப்ளிக் டிவி சேனலின் இயக்குனர் அர்னாப் கோஸ்வாமி, பாலிவுட் சினிமா துறை எப்போதும் குற்றவியல் தொடர்புகளைக் கொண்ட மிக மோசமான தொழில் என்றும்,

அது முழுக்க முழுக்க கற்பழிப்பாளர்கள், குண்டர்கள், பாலியல் சுரண்டல்கள் உள்ள தொழில் என தனது விவாத நிகழ்ச்சியில் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது கண்டனத்தை பதிவு செய்த்துள்ளார்.

இதுகுறித்து ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில், “அர்னாப்பை பற்றிய படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தின் டைட்டில் ‘ARNAB- THE NEWS PROSTITUTE’ என கூறியுள்ளார். அர்னாப் கோஸ்வாமிக்கு எதிரான தனது கருத்தை தெரிவிக்கும் விதமாக செய்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட், கரண் ஜோஹர், ஷாருக்கான், மற்றும் பலருக்கும் கடைசியாக ஒன்றை சொல்கிறேன். படங்களில் ஹீரோக்களை உருவாக்குவதும், படங்களில் ஹீரோக்களாக இருப்பதும் மட்டும் போதாது.

நம்மை கொடூரன்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கும் அர்னாப் கோஸ்வாமி போன்ற வில்லன்களையும் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும் என்றும், உங்களின் அமைதி தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம் உதயம்; இயக்குனர் பாரதிராஜா