அறிவியல் விண்வெளி

ராஜஸ்தானில் வெடி சத்ததுடன் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள்?

ராஜஸ்தானில் பலத்த சத்ததுடன் வானத்திலிருந்து மர்மப் பொருள் விழுந்ததால் அதிர்ச்சியில் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடி உள்ளனர்.

ராஜஸ்தான் சஞ்சோர் பகுதியில் வானிலிருந்து விண்கல் போன்ற ஒருப் பொருள் திடீரென பலத்த சத்ததுடன் கீழே விழுந்தது. இந்த வினோதப் பொருள் விழுந்த இடத்தை சுற்றி 2 கிமீ சுற்றளவு வரை பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. சத்தம் குறித்து அப்பகுதியினர் ஆராய்ந்தபோது விண்கல் போன்ற ஒருப் பொருள் 2 அடி ஆழத்தில் நிலத்தில் கிடந்ததை கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அக்கல்லை மீட்டு வல்லுநர்களிடன் ஆராய்ச்சிக்காக அளித்துள்ளனர்.

பலத்த சத்ததுடன் விழுந்த அந்த பொருள், அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த சத்தம் கேட்டபோதிருந்து சுமார் 2 மணி நேரம் வரை அந்த பொருள் சூடாக இருந்துள்ளது. விமானாமே வெடித்ததுபோல் சத்தம் கேட்டதாக பொருள் விழுந்த இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க: கடனில்லா நிறுவனமானதாக முகேஷ் அம்பானி பெருமிதம்

இதுகுறித்து ராஜஸ்தான் காவல் துறையினர் கூறுகையில், புகார் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினோம். அந்தப் பொருளின் எடை 2.78 கிலோ இருக்கும். சில மணி நேரம் சூடாகவே இருந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என் றனர்.

முதற்கட்ட சோதனையில் ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல், இரும்பு உள்ளிட்டவை அந்த பொருளில் அடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்தக்கட்ட சோதனைக்காக ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அந்தபொருளை அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

32 Replies to “ராஜஸ்தானில் வெடி சத்ததுடன் வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *