மெக்சிகோவின் வனேசா போன்ஸ் டி லியோன் 68வது உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
 
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி பட்டத்திற்கான போட்டி இன்று நடந்தது. இதில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் பட்டத்தினை வென்றுள்ளார்.
 
அவருக்கு முன்னாள் உலக அழகியான இந்தியாவின் மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார்.
 
உலக அழகி பட்டம் வென்ற வனேசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் மாடலாகவும் மற்றும் நிகழ்ச்சி நடத்துபவராகவும் இருந்து வருகிறார்.
 
இந்த பட்டம் வென்றது பற்றி அவர் கூறும்பொழுது, என்னால் இதனை நம்ப முடியவில்லை. மெக்சிகோவில் இருந்து வந்திருந்த மக்கள் மற்றும் என்னுடைய நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர் என கூறியுள்ளார்.