முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்த விவரம் வருமாறு :

கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளனர்.

அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் 1.4 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண், முகவரி, படிப்பு விவரங்கள், பணி விவரங்கள், நண்பர்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களும் திருடப்பட்டுள்ளன.

மேலும் 10 லட்சம் நபர்களின் கணக்குகளை நோட்டமிட்ட ஊடுருவல்காரர்கள், அவர்களிடமிருந்து எந்தத் தகவல்களையும் திருடவில்லை. மேலும், முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட வலைதளங்களிலுள்ள நபர்க