2011 மும்பை தாக்குதலுக்கு பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மசூத் அஸார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை.
 
மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல்களின் போது, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்தது.
 
காரணம் மசூத் அஸார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும். மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது.
 
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு எதிர்ப்பு வலுத்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆதரவுடன் மசூத் அசாருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 
தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடைசி நேரத்தில் சீனா அதிகாரத்தை பயன்டுத்தி மீண்டும் முட்டுக்கட்டை போட்டது.
 
மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதில் ஆராய வேண்டியவை நிறைய இருப்பதாக கூறிய சீனா, போதுமான கால அவகாசம் இன்னும் தேவை என்றும் தெரிவித்தது.
 
2017 பிரிக்ஸ் மாநாட்டின்போது, இந்தியா – சீனா – ரஷ்யா நாடுகள் கூட்டாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.அதில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து செயல்படுவதே அந்த ஒப்பந்தமாகும்.
 
பிரதமர் மோடி அடிக்கடி சீனா விஜயம் மேற்கொண்ட நிலையில் அவரின் ராஜதந்திர முயற்சியால் இமசூத் அஸார் விவகாரத்தில் சீனாவின் நிலைபாடு மாறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
 
ஆனால், இந்த நிகழ்விலும் அப்படி அமையவில்லை. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் பெரும் பின்னடைவாக சர்வதேச நிபுணர்களால் கருதப்படுகிறது .
 
மேலும் சென்ற முறை பாஜக ஆட்சியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், 1999-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீரி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு அழைத்து செல்லப்பட்ட விமானத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசரான அஜித் தோவல் இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசார் மற்றும் முஸ்தாக் அஹ்மத் சர்கார் ஆகியோரை விடுவிப்பதற்கு அம்மாநில முதலமைச்சர் பரூக் அப்துல்லாஹ் சம்மதிக்காததால், சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக மத்திய அரசு சார்பில் இந்திய புலனாய்வு அமைப்பின் அப்போதைய தலைவரான அமர்ஜீத் சிங் டுலாட் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைத்து இருந்த்து .
 
இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பரூக் அப்துல்லாஹ், “தற்போது எங்களை துரோகிகள் என்று அழைப்பவர்களிடம், மசூத் அசாரை விடுவிக்க வேண்டாம் என்று நாங்கள் 1999ஆம் ஆண்டே கூறியிருந்தோம். பாஜக அரசின் அன்றைய முடிவுக்கு அன்று மட்டுமல்ல, இன்றும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
 
ஆனால் இந்த தகவல்களை இது வரை மோடியின் தலைமையிலான பாஜக அரசு மறுக்கமால் மவுனம் காத்து வருகிறது .
 
அண்டை நாடானா பாகிஸ்தானோ ரசோ, மசூத் அஸாரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கூறியிருக்கிறது. புல்வாமா தாக்குதலில் அவர் தொடர்புடையதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்துவிட்டது.
 
மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கிறது.
 
தீவிரவாதத்தை ஒழிக்கும் விவகாரத்தில் உள்ள வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவை என்பதே இதன்மூலம் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
 
அது மட்டும் அல்ல இனி பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் சீனாவிற்கு உள்ள தொடர்பு பற்றி கண்டுபிடிப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
 
உலக அரங்கில் இருந்து, எதற்காக சீனா பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்க நினைக்கிறது என்பதை ஆராய வேண்டும்.
 
1980களில் ஆப்கன் சோவியத் போரில் மசூத் அஸாரின் வாழ்க்கை ஆரம்பமாகிறது. பின்னர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை தொடங்குகிறார்.
 
மற்ற அமைப்புகள் சோவியத் படைகளுக்கு ஆதரவாக சண்டையிட, ஜெய்ஷ் இ முகமது அமைப்பும் இதில் எதேச்சையாக இடம்பெறுகிறது.
 
இதனால், சீனா ஆதரவு சோவியத் எதிர்ப்பு அமைப்புகள் பின்வாங்குகின்றன. இந்த காலகட்டத்தில்தான் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கிறது.
 
இதை பெரிதாக்க சோவியத்தும் உதவுகின்றன. இது அடுத்ததடுத்த பகுதிகளுக்கும் சீனாவுக்கு எதிரான புரட்சியாக மாறியது.
 
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா சாதகமான நிலைபாட்டிற்கு வர இந்த நிகழ்வுகளும் காரணமாக அமைகின்றன என்பதை இந்தியா கணக்கில் கொள்ள வேண்டும்
 
தலிபான்கள் கை ஓங்கியிருந்த 2000 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், பாகிஸ்தானுக்கான சீன தூதருடம், தலிபான் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
 
இதில், சீனாவில் உள்ள தான்னாட்சி பிராந்தியமான ஆதாவது சீனாவுக்கு தலைவலியாக இருக்கும் சின்ஜியாங்கில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படாது என்று தலிபான் உத்தரவாதம் வழங்குகிறது.
 
மேலும் சீனா – பாகிஸ்தானின் பொருளாதார பாதை திட்டத்திற்கும் இடையூறாக இருக்க மாட்டோம் என்று தெரிவித்தது.
 
இதனால் உலக நாடுகள் மத்தியில் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவும், சொந்த தேவைகளுக்காகவும் தீவிரவாத அமைப்புகளை பாதுகாக்கும் சீனாவுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கும் இதை கவனத்தில் வைத்து . வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது எனபதே காலத்தின் கட்டயமாக கருத வேண்டி உள்ளது