அரசியல் தமிழ்நாடு

போன் சுவிட்ச் ஆப் பாஜகவின் தேசிய பொது செயலாளர் ராஜா தலைமறைவு

நேற்று முதல் நாள் மாலை புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அசிங்கமாக கொச்சையாக திட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அவர் கைது செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை பிடிக்க இரண்டு தனிப்படை பிரிவு போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. 10 போலீஸ் கொண்ட இரண்டு தனிப்படை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நேற்றே தலைமறைவாகிவிட்டார். நேற்று காலையில் மன்னார்குடியில் இருந்த நிலையில் இரவோடு இரவாக அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அதன்பின் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதனால் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உஷார் நிலையில் போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

இந்த எச்.ராஜா உண்மையில் எங்கே சென்றார் போலீஸ் அவருடன் இருந்த போது அவர் எப்படி தப்பித்து சென்றார் என்ற கேள்வி எழுந்தது. இன்று அவர், முன்ஜாமின் மனுதாக்கல் செய்ய தயார் ஆகி வருவதாகவும் அவருக்காக சிறப்பான வக்கீகள் குழு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் அவர் தனது பண்ணைவீட்டில்தான் தங்கி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காரைக்குடியில் உள்ள கண்டனூர் பகுதியில் அவரது பண்ணைவீடு இருக்கிறது. இதன் பெயர் ஸ்ரீ லலித்ராஜ் கார்டன் ஆகும். அங்குதான் நேற்று இரவோடு இரவாக சென்று தங்கி உள்ளார் எச்.ராஜா.

இந்த நிலையில் தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வழக்கமாக பாதுகாப்பு அளிக்கும் போலீஸார் உடன் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பண்ணை வீட்டுக்குள் போலீஸ் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இதுகுறித்த அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்று, அந்த பண்ணை வீடு வீடியோவும், வெளியே போலீஸ் வாகனம் நிற்பதும் வீடியோவாக வெளியாகி உள்ளது. ஏற்கனவே தலைமை செயலாளர் கொளுந்தனார் எஸ்.வி சேகருக்கு இப்படி போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பல காவல் துறை அதிகாரிகள் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் சில காவல் துறையினர் உதவியோடு அவர் ஒளிந்துள்ளது பல காவல்துறையினரை மன உளச்சலுக்கு ஆளாக்கி வருகிறது என்று காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது ..

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

75 Replies to “போன் சுவிட்ச் ஆப் பாஜகவின் தேசிய பொது செயலாளர் ராஜா தலைமறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *