[su_heading size=”15″ align=”left”]காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் , பொருளதார நிபுணர் ரகுராம் ராஜனும் நடத்திய உரையாடல்களின் விவரம்[/su_heading]
 
ராகுல்: வணக்கம்.
 
ரகுராம்: வணக்கம். நலமா?
 
ராகுல்: நான் நலம். உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 
ரகுராம்: நானும்தான்.
 
ராகுல்: பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி என்பதே மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. அல்லது மீட்டெடுக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன?
 
ரகுராம்: ஊரடங்குக்கு பின்னேயும் மக்கள் சமூக விலகலை எப்படி கடைபிடிப்பார்கள். வேலை செய்யும் இடங்களில் போக்குவரத்தில் எப்படி சமூக விலகல் சாத்தியமாகும். பொதுப் போக்குவரத்தாக இருந்தால், சமூக விலகல் எப்படி சாத்தியமாகும்.?
 
ராகுல்: அதைத்தான் பெரும்பாலான மக்கள் சொல்கிறார்கள். சுழற்சி முறையில் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு மறுபடியும் முழு ஊரடங்கை அறிவித்தால், அது பொருளாதார நடவடிக்கைகளில் பேரழிவைத்தான் உருவாக்கும்.
 
ரகுராம்: இரண்டாவது முறை ஊரடங்கை அமல்படுத்தினால், முதல் முறை வெற்றி பெறவில்லை என்று தான் அர்த்தம். எனவே மூன்றாவது ஊரடங்கை பிறப்பித்தால், அது நம்பகத்தன்மையை குறைக்கும். முற்றிலும் நோய் தொற்றை ஒழித்துவிட முடியாது. ஊரடங்கின் போது இருந்த நோய் தொற்றையாவது நாம் தடுக்க வேண்டும்.
 
ராகுல்: அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அதிகபட்ச பரிசோதனை வசதிகள் நம்மிடம் இல்லை. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
ரகுராம்: அமெரிக்காவில் தற்போது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனைகளை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பரிசோதனைகளை செய்யும் நடவடிக்கையில் அமெரிக்காவில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோதனைகள் நடக்கின்றன. இதனை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும்.
 
ராகுல்: விவசாயத்துறை, தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர்களது நிதி நிலை குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?
 
ரகுராம்: இந்த நேரத்தில் நேரடி பணி பரிவர்த்தனை நடவடிக்கையை அவசியம். அனைத்து வகை உதவித் தொகை பெறுவோர், வேலையில்லாதோர், வாழ வழியில்லாதோருக்கு அடுத்த 4 மாதங்களுக்கு நாம் நிதியுதவி செய்து ஆதரவளிக்க வேண்டும். பண உதவியோடு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் உணவும் வழங்க வேண்டும்.
 
ராகுல்: ராஜன், ஏழைகளுக்கு உதவ எவ்வளவு பணம் தேவைப்படும்?
 
ரகுராம் ராஜன்: தோராயமாக 65 ஆயிரம் கோடி தேவைப்படும். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி 200 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் 65 ஆயிரம் கோடி ரூபாய் பெரிய தொகை அல்ல. ஏழைகளை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
 
ராகுல் : அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது பிரச்சினை என்று நினைக்கிறீர்களா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்ததால், உரையாடல் நின்றுபோனது. இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரையாடல் தான் உதவிகரமாக இருக்கும்.
 
[su_spacer]
ரகுராம்: அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்ற முக்கியத்தை நானும் நம்புகின்றேன். மக்களுக்கு அதிகாரம் தரப்பட வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்துகளுக்கும், மாநில அரசுகளுக்கும் குறைந்த அளவிலான அதிகாரமே உள்ளது. உங்களிடம் நான் அதே கேள்வியை கேட்க விரும்புகின்றேன். பஞ்சாயத்து ராஜை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மாற்றங்களும் பலனும் என்ன?
 
ராகுல்: பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்வேறு முற்போக்கு இயங்கங்கள் பஞ்சாயத்து ராஜில் பங்கேற்றன. ஆனால், மீண்டும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் அதிகாரிகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக அதனை நகர்த்திவிட்டோம். இவ்வாறு பின்வாங்கியதற்காக நான் வருந்துகின்றேன். தென் மாநிலங்களைப் பார்த்தீர்களேயானால், அதிகாரத்தை பரவலாக்கியதால் நன்கு செயலாற்றியிருக்கிறார்கள். வடமாநிலங்களில் ஒரே இடத்தில் அதிகார குவியல் இருப்பதால், பஞ்சாயத்து ராஜ் மற்றும் அதன் ஆணிவேர் அமைப்புகளின் அதிகாரத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள்.
 
ரகுராம் : நான் ஏன் அதிகாரம் கொண்டவராக இருக்கக் கூடாது என்ற எண்ணமே மேலாங்கி இருக்கிறது. அதிகார குவியலே அவர்களது ஆசையாக இருக்கிறது. மாநிலங்களுக்கு நிதி கொடுத்தால், அதை மாநில அரசுகள் மதித்து பெற வேண்டும். நிதி தராவிட்டால், மாநில அரசுகள் கேள்வி எழுப்பக் கூடாது என்ற என்ற நிலையே உள்ளது.
 
ராகுல்: அடிப்படை கட்டமைப்பு மக்களை இணைக்கிறது என்றும் அது அவர்களுக்கு வாய்ப்பு தருகிறது என்றும் நீங்கள் கூறுவது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், பிரிவினையும், வெறுப்புணர்வும் மக்களை துண்டித்துவிட்டது. பிரிவினை கட்டமைப்பும், வெறுப்புணர்வு கட்டமைப்பும் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.
 
ரகுராம் : நிச்சயமாக. சமூக நல்லிணக்கம் மிகவும் அவசியம். நாம் இந்த கட்டமைப்பில் ஒரு பகுதி என்றும், கட்டமைப்பில் சரிசமமாக பங்கேற்பது அவசியம் என்றும் ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். தற்போது நமது சவால்கள் பெரிதாக உள்ளன. நம் நாட்டை கட்டமைத்த தேசத் தந்தைகள், அரசியல் சாசனத்தை எழுதியவர்கள்,ஆரம்ப கால அதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள நேரத்தை ஒதுக்க வேண்டும்.
 
சிலர் பிரச்சினைகளை அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு தொடாமல் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த பிரச்சினைகள் வரும்போது, அவற்றை எதிர்த்துப் போராட ஒவ்வொருவரும் நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறோம்.
 
ராகுல் : பொருளாதாரத்துக்கு எவ்வளவு முக்கியத் துவம் கொடுத்தோம், உணர்வை பகிர்ந்தோம் மற்றும் அதன் மீது நம்பிக்கை வைத்தோம் என்று நினைக்கும் போதும் ஆச்சர்யமடைகிறேன். நம்பிக்கை வைப்பது தான் உண்மையான பிரச்சினை என்பதை கொரோனா பிரச்சினையின்போது நான் கண்டறிந்தேன். இந்த பிரச்சினையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என மக்களுக்கு தெரியவில்லை.நமது அமைப்பின் மீதே மக்களுக்கு பயம் வந்துவிட்டது. வேலை வாய்ப் பின்மையை நீங்கள் பேச வேண்டும். நாம் பெரிய அளவில் அதிகபட்ச வேலையின்மையை சந்தித்து வருகிறோம். இது இன்னும் பெருமளவு அதிகரிக் கவுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த வேலை யின்மை எந்த அளவுக்கு போகும், எந்த அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்?
 
ரகுராம் : வேலையின்மை எண்ணிக்கை நிச்சயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில், கொரோனா பாதிப்பால் மேலும் 10 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும், 6 கோடி பேர் வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரம் சரி என்றோ தவறு என்றோ விவாதம் எழுந்தாலும், இந்த தரவுகள் தான் தற்போது நம்மிடம் உள்ளன. தற்போது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வேலை இழந்தவர்களுக்கு விரைந்து வேலை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.
 
ராகுல் காந்தி: பிரச்சினைகளின் அளவுகோல் மற்றும் சமமற்ற நிலை. சாதி போன்ற கட்டமைப்புகளால் அமெரிக்காவிலிருந்து இந்தியா முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா? நம் நாட்டில் ஏராளமான சமுதாய மாற்றம் தேவைப்படுகிறது. சமுதாய மாற்றம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடுகிறது. அரசியல், கலாச்சாரம், தமிழ் மொழி என தமிழ்நாடு மாறுபட்டிருக்கிறது. தமிழ் மக்களின் சிந்தனையும் உத்தரப்பிரதேச மக்களின் சிந்தனையும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. எனவே, இவர்கள் எல்லோருக்கும் பொருந்தும் திட்டங்களைத் தான் வகுக்க வேண்டும். ஒரு தீர்வு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் எடுபடாது.
 
ரகுராம்: அடித்தளத்தையே நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க் கைத்தரத்தை உயர்த்த நாம் வழிவகை செய்ய வேண்டும்.
 
ராகுல்: நல்லது, நன்றி, நன்றி டாக்டர் ராஜன்.
 
ரகுராம்: மிக்க நன்றி. உங்களுடன் நிகழ்த்திய உரையாடல் மகிழ்ச்சியாக இருந்தது.
 
ராகுல்: பாதுகாப்பாக இருங்கள்.
 
ரகுராம்; நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நல்லதே நடக்கும். நன்றி, வணக்கம்.