கடந்த ஒரு மாதத்தில் 100 சென்டி மீட்டருக்கு மேலே மழை என்பது கடந்த 200 ஆண்டுகளில் நடைபெற்ற மூன்றே நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்..

கொரோனா போல இதுவும் ஒரு கொடுமையான பேரிடர் தான்.. ஆனாலும் இப்போதுள்ள மழையைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெய்த சென்னை 2015 மழைக்கு புயலென புறப்பட்ட அரசு சாரா தன்னார்வ தொண்டர்கள் இந்த முறை எங்குமே காணவில்லை..

காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் முழுமையாக களத்தில் இறங்கிய அரசு.. ஆனாலும் அப்படி செயலாற்றிய அரசு இயந்திரத்துக்கு உதவாமல்.. உலகத்திலே பெரிய கட்சி என மார்தட்டிக்கொள்ளும் பாஜக தினமும் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன..

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியோ ஒரு படி மேலே போய் கரணி இல்லாத காரணத்துக்கே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டு நாட்களாக போராடி விட்டு மகிழ்ச்சியுடன் டாட்டா பை பை காட்டி செல்கிறார்.. எதற்காக போராடினார் எந்த தீர்வை எட்டினார் என அவருக்காவது புரிந்து அவராவது உணர்ந்தால் மகிழ்ச்சி தான்..

இந்த நேரத்தில் மக்களுடன் களத்தில் இருக்கவேண்டிய முக்கியமான எதிர்க்கட்சி அதிமுக உட்கட்சி பூசலால் தடுமாறி தத்தளிக்கிறது.. அவர்களுக்கு தமிழ்நாடு தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை அவர்களின் கட்சியும் எங்கு யாரிடம் இருக்கிறது என்றும் சுத்தமாக புரியவில்லை..

தனது வாக்கு வங்கியை தொலைத்த பாமக நிறுவன குடும்பமோ ஜெய்பீம் படத்தை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது..

100 சென்டிமீட்டர் மழை காரணமாக புறநகர் சென்னையில் அனைத்துக் ஏரிகளும் நிரம்பி அவைகளெல்லாம் வழிவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த மாதத்தில் முதல் 10 நாட்களில் மழையில் பாதிக்கப் படாத இடங்கள் கூட..

கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் தண்ணீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. மிக அதிகமாக பாதிக்கப்பட்ட 19 மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்ட வரிசையில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் தூத்துக்குடி வேலூர் கன்னியாகுமரி என்ற நீண்ட பட்டியலே உள்ளது..

வரலாறு காணாத விதமாக பாலாறு முழுவதும் வெள்ளம்.. இதனால் பல கிராமங்களில் கடுமையான பாதிப்புகள்.. பல இடங்களில் தரை பாலங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு தொடர்புகள் அற்று பல கிராமங்கள் தனித்தீவாக மூழ்கியுள்ளன..

புறநகர் சென்னையில் மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் பல வீட்டுக்குள் விஷப்பூச்சிகள் கொசு தொல்லை வேறு.. பல இடங்களில் அறிவிக்கப்படாத பல மணி நேரம் மின்வெட்டுகள் வேறு..

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய பேரிடராக இதனை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.. காரணம் முழு முனைப்புடன் இறங்கினாலும் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய சீர் செய்யவே மூன்றிலிருந்து ஆறு மாதங்களாகும்..

மக்கள் பணியில் அரசுடன் திமுக கட்சி மட்டுமல்ல.. திமுக கட்சியுடன் தேர்தலில் கூட்டு வைத்த கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல.. மாறாக அதிமுக பாஜக பாமக நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக வேலை செய்ய வேண்டிய நேரம் இது..

கடந்த 200 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஒரே மாதத்தில் 100 சென்டிமீட்டருக்கு மேல் கொட்டி தீர்த்த மழை தந்த பேரிடர் இதுதான் என்பதனை மனதில் கொண்டு..

https://www.facebook.com/savenra/posts/7427834970575695