தமிழகத்தில் மார்ச் 1 முதல் உரிமமின்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதியில் பாதுகாப்பு இல்லை என மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் மார்ச் 1 முதல் உரிமமின்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உத்தரவிட்டது.
 
மேலும் பிப்.15-க்குள் விடுதிகளை ஆய்வு செய்து தடையில்லா சான்று வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிமன்றம் பிப்.28-க்குள் அனைத்து ஆட்சியர்களும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.