கேரளா பெண்கள் வாழ்வியல்

பெண்கள் அனுமதிக்கப்படுவதால் கேரளா அரசு புதிய விதிமுறைகளை அறிவிப்பு

அண்மையில் 10 வயது முதல் 50 வயதிலான பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது இதை தொடர்ந்து சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதால் கேரளா அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு :

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களுக்கு தனிவரிசை கிடையாது. தரிசனத்துக்கு பலமணிநேரம் காத்திருக்கக்கூடிய பெண்கள் மட்டும் வருமாறு அவர் அறிவுரை கூறினார். பெண்கள் அனுமதிக்கப்படுவதால் பாதுகாப்புப் பணியில் பெண் போலீசை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சபரிமலையில் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்தர் இதனை தெரிவித்தார்.

மேலும் நிலாக்கல்-பம்பை இடையே மகளிருக்காக 25% பேருந்துகள் இயக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக்கூடாது என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

168 Replies to “பெண்கள் அனுமதிக்கப்படுவதால் கேரளா அரசு புதிய விதிமுறைகளை அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *